June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஜெகன் ராஜ்:-தேனி. ஜூன்.24-தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஜெகன் ராஜ் வழங்கினார்.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உதவிகள் வழங்குதல்,கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி பரிசு வழங்குதல், கோவில்களில் சமபந்தி விருந்து வழங்கி கொண்டாடினர்.மேலும் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி,உட்பட முக்கிய தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து,சின்னமனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஜெகன் ராஜ் தெரிவித்ததாவது:தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்,அன்னதானம் வழங்கியும், பூஞ்செடிகள் ,மரக்கன்றுகளை கொடுத்தும் கொண்டாடி வருகிறோம். தமிழ்நாட்டில் புதிய புரட்சியை உருவாக்கி இருக்கிறார் முதல்வர்.சாதி, மதம், பணம், கடந்து ஒரு அரசியலை கொண்டு வந்து, சமூகப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். ஊழலை ஒழித்து இப்போதே ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளார்.அவருக்கு நாங்கள் அத்தனை பேரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றோம் என்று தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சின்னமனூர் நகர த.வெ.க.நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.