April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வளரும் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு..!

வந்தவாசி, மார்ச் 03:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வளரும் விஞ்ஞானி விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காஞ்சி டிஜிட்டல் டீம் சார்பாக அறிவியல் தினத்தன்று வாலாஜாபாத் அருகில் தனியார் கல்லூரியில் நடத்திய மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் நிகழ்வில் வெற்றி பெற்று வளரும் விஞ்ஞானி விருது பெற்று பங்கேற்பு சான்றிதழ் பெற்ற செய்யாறு பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சான்றிதழ், கேடயம், மெடல் பரிசுப் பொருள்களை பள்ளியில் நடைபெற்ற விழாவில் செய்யாறு ரெட் கிராஸ் சங்க செயலாளர் சண்முகம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், பள்ளி தலைமையாசிரியை இரா.தேன்மொழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp