தனக்காக தேர்தல் களத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என அறிவிப்பு..
ஈரோடு. ஏப்ரல். 26
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கிருத்திகா தேர்தல் களத்தில் தனக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவை 17வது பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நான் போட்டியிட்டேன்.
இந்த நிலையில் நான் மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தேன்.
எனக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயலா அர்ஜுன் ராம் மேக் வாலே, நட்டா, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தற்போதைய மாநில தலைவர் நாகேந்திரன் மற்றும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக மற்றும் நம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் எனக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா சிவக்குமார் தனது நன்றி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :