புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் சிமெண்ட் சாலைகளை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
முதலியார்பேட்டை பகுதியில் உள்ள ஜீவானந்தம் நகர் மற்றும் வ.உ.சி வீதிகளில் பழுதடைந்துள்ள சிமெண்ட் சாலைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்துவதற்காக ரூ.29.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இன்று (07/01/2026) புதன்கிழமை காலை 9:30 மணியளவில் நடைபெற்ற இந்த பூமி பூஜை விழாவிற்கு முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சம்பத் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் நகர் மற்றும் வ.உ.சி வீதிகளில் வசிக்கும் சுமார் 3000 மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. K. வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் திரு. R. கந்தமூர்த்தி, செயற்பொறியாளர் திரு. S. பக்தவத்சலம், உதவிப் பொறியாளர் திரு. S. இரமேஷ்குமார், இளநிலைப் பொறியாளர் செல்வி P. தேவிபாரதி மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!