June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வந்தவாசி, மே 27:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து ‘மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவர் சு.தனசேகரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சா.ரா.மணி, நகராட்சி பசுமை தூய்மை பணிகள் ஒருங்கிணைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.ராமலிங்கம் பங்கேற்று, பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு பதிலாக மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் பிளாஸ்டிக் பேப்பர்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினார். பல்வேறு கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது கேரி பேக்குகளை பயன்படுத்தக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கல்வி மைய ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.