ஆட்சி மாறியதால் காட்சியும் மாறியது கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம்…
போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு…
ஈரோடு. மே. 27
நேற்று நடைபெற்ற ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவத முன்னிட்டு கடந்த சில மாதங்களாக ஈரோடு மாநகராட்சி கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் விலகிக் கொண்ட பிறகு முதல் முறையாக நேற்று ஈரோடு மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.
வழக்கம்போல் கூட்டத்திற்கு மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் அரபித் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பகல் 12 மணி ஆகியும் கூட்டம் தொடங்காமல் இருந்தது. திமுக கவுன்சிலர்கள் மேயர் நகரத்தின் அறையில் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கூட்ட அரங்கத்திற்கு வந்த சில கவுன்சிலர்கள் கால தாமதம் குறித்து கடுமையாக கூட்டரங்கில் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் மேயரின் அறைக்குள் சென்று கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக கூட்டம் தொடங்கிய நிலையில், காட்சிகள் சற்று மாறி இருந்தது.
ஈரோடு மாநகராட்சி பொருத்தவரை அதிமுகவிற்கு ஆறு கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக கூட்டணியில் அங்கவைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கவுன்சிலர் உள்ளனர்.
இதற்கு முன்பு ஆறு கவுன்சிலர்கள் அதிமுக கட்சியின் அடையாளத்தில் வருவார்கள். காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தில் வருவார்கள்.
ஆனா நேற்றைய கூட்டத்தில் மூன்று அதிமுக கவுன்சிலர்கள் மட்டும் காங்கிரஸை சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலரும், தவெக கட்சியின் அடையாளத்தில் வந்திருந்தனர்.
இவர்களைப் பார்த்து துண்டு மாறிவிட்டது என்று மற்றவர்கள் கிண்டல் அடித்தனர்.
வழக்கம்போல் பேசும் 43 வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பாட்ஷா, அரசியல் அணி மாறிய நிலையில் புதிய அரசை புகழ்ந்து பேசினார்.
இதனால் கட்டுப்பான திமுக கவுன்சிலர்கள் பலரும் நான்கு மண்டல தலைவர்களும் உங்கள் ஐந்து எம்எல்ஏக்களும் நீங்களும் திமுகவின் ஆதரவோடு எங்களின் உழைப்போடும் தான் வெற்றி பெற்றீர்கள்.
இதில் பெருமை பேசிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என உரக்க குரல் எழுப்பி கூத்தடித்தனர். இதனால் கோபப்பட்ட கவுன்சிலர் சபுராமா சாதிக பாட்ஷா, திராவிட மாடல் 2.0 என முந்தைய திமுக அரசை குற்றம் சொல்லி பேச ஆரம்பித்தார்.
இதனால் மேலும் கோபமடைந்த பல திமுக கவுன்சிலர்கள் அவரின் இருக்கைக்கு முன்பாக வந்து நெருக்கத்தில் நின்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக கவுன்சிலர் சபு ராமாவும் மைக் பிடித்து திமுக கவுன்சிலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவருக்கு ஆதரவாக அதிமுகவிலிருந்து தவெகவுக்ஞ அணி மாறிய கவுன்சிலர்களும் கூச்சலிட்டதால், மாநகராட்சி கூட்ட அரங்கில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கட்டும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
தவெகவிற்ஞ சென்ற கவுன்சிலர் ஜெகதீசன் இரு தரப்பினரையும் சமாதானமும் செய்ய கடும் முயற்சி எடுத்தார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு அணி மாறிய அதிமுக, காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த கடும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம் சிறிது நேரம் நீடித்ததால், ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் அமைதி காத்தனர்.
சிறிது நேரத்தில் திடீரென ஈரோடு நகர காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மாநகராட்சி கூட்ட அரங்கத்திற்கு வந்தனர். இதனால் மேலும் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசாரிடம் விசாரித்த போது ஆய்வாளர் ராஜேஸ்வரி, மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தகவல் கிடைத்தது அதனால் பாதுகாப்பிற்காக நாங்கள் வந்தோம் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய திமுக மண்டல குழு தலைவர்கள் பி. கே பழனிசாமி, காட்டு சுப்பு ( என்கின்ற) சுப்பிரமணி, குறிஞ்சி தண்டபாணி, சசிகுமார் மற்றும் திமுக கவுன்சிலர்கள் போலீஸ் வந்ததை கண்டித்தும், தேவையற்ற நபர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் வந்துள்ளதை கண்டித்தும் கடுமையாக பேசினர்.
முன்பு நாங்கள் ஆளுங்கட்ச்சியாக இருந்தோம் தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட மாநகராட்சி எங்களுடைய ஆட்சியாக தான் உள்ளது என்பதனை யாரும் மறந்து விட வேண்டாம் என்று பேசினர்.
மேலும் இதுவரை கவுன்சிலருக்கு தகவல் தந்து வந்த அதிகாரிகள் தற்போது வேறு நபர்களுக்கு மாநகராட்சி குறித்த தகவலை சொல்லி வருகிறார்கள் என்றும் வார்டு பகுதியில் கவுன்சிலர்கள் இருக்கும்பொழுது நாங்கள் ஆளுங்கட்சி காரர்கள் என்று கூறி வார்டு பகுதியில் உள்ள குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் என்று பொதுமக்களை தேவையில்லாமல் சிலர் ஒவ்வொரு வாரத்திலும் தொந்தரவு செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கண்டிக்கத்தக்கது வார்டு கவுன்சிலர்கள் இருக்கும் பொழுது வேறு தனி நபர்கள் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதை ஆணையாளர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஒரு சேர கோரிக்கை வைத்தனர்.
மேலும் தந்தை பெரியாரின் படம் வைக்க அந்தக் காலத்தில் நகராட்சியாக இருந்த பொழுதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு படம் வைக்கப்பட்டது. ஆனால் எந்த தீர்மானம் கொண்டு வந்து இன்றைய முதல்வரின் படத்தை மாநகராட்சி கூட்டுறையில் வைத்தீர்கள். முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் அவருடைய படம் இத்தனை ஆண்டு காலமாக இருந்த நிலையில் இன்றைக்கு அதனை அகற்றி உள்ளீர்கள். ஆட்சியை நம்பி அதிகாரிகள் ஆட்டம் போட வேண்டாம் என்றும் கடுமையாக வாக்குவாதத்தில் திமுக கவுன்சிலர்கள் ஈடுபட்டனர்
.
பின்னர் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அவை குறிப்பில் ஏற்றப்பட்டது..
ஈரோடு மாநகராட்சி நேற்றைய கூட்டம், ஆட்சி மாறிய நிலையில் காட்சியும் மாறியதால் தொடக்க முதல் முடியும் வரை வாக்குவாதம் கூச்சல் குழப்பம் என்று சென்று முடிந்தது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!