வந்தவாசி, ஜூலை 08:
திருவண்ணாமலை மாவட்டம்,, வந்தவாசி மலை நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சிநேகிதன் அறக்கட்டளை
இணைந்து ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு
அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கு விழாவை நிகழ்த்தினர். சினேகிதன் மேனேஜிங் டிரஸ்ட் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். நிகழ்விற்கு அரிமா.யோகானந்தம் தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், ஸ்ரீ ஹரி, சூரிய பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர். இருதய ராஜேஸ்வரன், கற்பகம், நாராயண மூர்த்தி பெற்றோர் கழக ஆசிரியர் கழக மாத தலைவர்,
மாவட்ட தி.மலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு உரிமைகள் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அதியமான் குமார் பெரணமல்லூர்
விக்னேஸ்வரன்,
மகாலட்சுமி,
ராஜேஷ்குமார், ராதா ஆகியோர் பங்கேற்றனர். வெங்கடேசன்
நன்றி கூறினார். சமூக ஆர்வலர் கேப்டன் பிரபாகரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்