வந்தவாசி, ஜூலை 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 46 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு அருட்சக்தி ஆறு.லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்