கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் திரளாகப் பங்கேற்ற சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி, மத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தக்பீர் முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு தொழுகை நடக்கும் திடலுக்குச் சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மைதானத்தில் நடைபெற்ற கூட்டுத் தொழுகையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், சமுதாய நல்லிணக்கத்திற்காகவும் மனமுருகி கூட்டுப் பிரார்த்தனை (துவா) செய்தனர்.
தொழுகை நிறைவுற்றதும், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்களது பக்ரீத் வாழ்த்துகளை நெகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், தொழுகை மைதானம் மற்றும் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்