June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுக்கோடலடை மாவட்டம் அறந்தாங்கிதமிழ்நாடு தவ்ஹீத்சமாஅத்கிளையின் சார்பாக இன்று (28.05.2026)அப்துல் ஹமீது தெரு தவ்ஹீத் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காலை சரியாக7 மணிக்கு நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கானஆண்களும் , பெண்களும் , குழந்தைகளும் சிறப்புத்தொழுகையிலும் அதற்கு பிறகான பெருநாள்உரையிலும் கலந்து கொண்டார்கள். தொழுகையின் ஒரு அங்கமான குத்பா பேருரையை மாநில பேச்சாளர் சகோ அபுபக்கர் சித்திக் நிகழ்த்தினார்.

இந்த உரையில் அவர் இப்ராஹிம் நபி அவர்கள் ஏகத்துவம் எனும் கொள்கைக்காக செய்த தியாகங்களை
நினைவு கூறி பேசினார், இஸ்லாமியர்கள் குர்பானி எனும் அடிப்படையில் பிராணிகளை பலியிட்டு ஏழைகளுக்கும்
ஒரு பங்கை வழங்க இந்த மார்க்கம் வலியுறுத்துகிறது என்று பேசினார்,


( மேலும் பாஜக ஒன்றிய அரசின் மூலமாகவும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தப்படுகிறார்கள் இஸ்லாமியர்களுக்கெதிராக பேசும் முதல் அமைச்சர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப்பினர்கள் எந்த விதமான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாவதாக தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில்
இஸ்லாமியர்கள் , இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையை கடைபிடிப்பதோடு தங்களின் சமூகநிலையை மாற்றுவதற்கு
தன்னலமில்லாத சேவையாற்ற வேண்டும் என பேசினார்.

குத்பா உரைக்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நகர தலைவர் தாரிக் இப்ராஹிம் அவர்கள்

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான
இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவதோடு , பல்லாண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை உரிய சட்ட நடைமுறைகளுக்குட்பட்டு விடுதலை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையும் வைத்தார் )
—`
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த இப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா உரைக்குப் பிறகு மக்கள் அமைதியான
முறையில் கலைந்து சென்றார்கள்., தொழுகைக்குப்பிறகு திடல் அழகிய முறையில் தூய்மைப்படுத்தப்பட்டதோடு கலைந்து செல்லும்
மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தொண்டரணியினர் சிறப்பான பங்களிப்பை செய்தார்கள்