June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை தெற்கு நகர செயளலார் A அழகர்

மணப்பாறை மக்களை காக்கும் எங்கள் மகராசி வேப்பிலை மாரி

வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அற்புதங்கள் பல புரியும் வரலாற்று சிறப்புமிக்க மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்

இத்தகைய பெருமைகளோடு திருச்சிக்கு தெற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மாமுண்டி ஆற்றங்கரையை அடுத்த மணப்பாறை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் வரலாற்று சிறப்புமிக்க முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும்

மணப்பாறை மாட்டுச்சந்தையும் மனம் விரும்பி மாநிலத்தவர் முழுவதும் விரும்பி சுவைக்கும் முறுக்குக்கும் பெயர் பெற்றவை தான் இந்த மணப்பாறை இத்தகைய வணிக நகரத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்கண்ட தெய்வமாய் பக்தர்கள் போற்றி வணங்கும் தெய்வங்கள் இந்த வேப்பிலை மாறி

மணப்பாறை நகர் பசுமையாக இருந்த ஊரின் நடுவே அழகிய வேப்பமரம் ஒன்று இருந்தது அதை சுற்றிலும் மூங்கில் மரங்கள் அடர்ந்திருந்தது அந்த மூங்கில் போத்தின் இடையே ஓங்கி உயர்ந்திருந்த மூங்கில் மரத்தை ஒருவர் வெட்டி சாய்க்க முனைந்தார் அப்போது வெட்டருவாளின் கூறிய முனை அழகாய் வளர்ந்திருந்த வேப்ப மரத்தை காயப்படுத்தி அந்த வேப்பமரம் அடியில் இயற்கையாக தோன்றியிருந்த புனிதக் கல் ஒன்றிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது

இதை சற்றும் எதிர்பாராத இந்த காட்சியை அறிவாளால் வெட்டியவர் அதிர்ந்து தான் கண்ட அதிசயத்தை ஊர் மக்களிடம் ஓடோடி கூறினார் இதை அடுத்து அங்கு திரண்ட மக்கள் அந்த காட்சியை பய பக்தியுடன் இரை பெருக்குடனும் நின்று வழிபட்டனர்

அந்த சமயத்தில் அன்னையின் அன்பில் திகைத்த இறை நெறியாளர் ஒருவருக்கு அருள் வந்து தான் மகமாயி என்றும் இந்த வேப்ப மரத்தின் அடியில் நீண்ட நெடுங்காலமாக இருப்பதாகவும் தனக்கு ஊரார் ஒருங்கிணைந்து ஆலயம் எடுத்து வணங்கி வந்தால் இந்த மணப்பாறை நகரை காத்து அருள் பாலிப்பதாகவும் கூறினார் ஊரார் அனைவரும் அவர்தான் திருவாதி தெய்வ வாக்காக பக்தியோடு ஏற்று மாரிக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்தனர்

வேப்பமரத்து அடியினில் அப்புனிதக் கல் தங்களின் குளம் காக்க வந்த மாறி தெய்வமாய் எண்ணி மிகுந்த இறை நெறியோடு அன்று முதல் போற்றி வணங்குகிறேன் அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகவும் சிலை வடிவில் திருக்கோலம் கொண்ட தெய்வத்திற்கு அருள்மிகு மாரியம்மன்க்கு காட்டும் புனித தீப ஆராதனைகள் யாவும் முதலில் அப்புனித கல்விக்கு காட்டிய பிறகு காட்டப்படுகிறது என்பது இன்று முறை அது நடைமுறையில் இருந்து வருகிறது பழமை சிறப்போடு மணவை நகரில் சீர்கூட்டி சிறந்தோங்கி நின்ற இவ்வாமையானது கடந்த 1979 ஆம் ஆண்டில் நடந்த வானவேடிக்கு நிகழ்ச்சியின் போது விழுந்த நெருப்பால் கோவில் முழுவதும் பற்றி எரியத் தொடங்கிய தங்களது குலதெய்வமாய் நின்று அருளாலித்த மாரியம்மன் கோவில் தீக்கிரையானதே என்பதை அறிந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் தீ விபத்தில் கோயிலின் உள்புறம் வளர்ந்திருந்த வேப்பமரம் முழுவதும் கருகியது சில ஆண்டுகளுக்குப் பிறகு கருகிய வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் துளிர்விடத் தொடங்கியது இதைக் கண்ட மக்கள் ஆனந்தம் அடைந்தனர் பட்ட மரம் துளிர்க்கும் பாலைவனம் செழிக்கும் என்று செவிகளில் கேட்டு வந்த பக்தர்களுக்கு இந்த நிகழ்வு சிலிப்பை உண்டாக்கியது மாண்டவர்கள் மீண்டதைப் போலமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்

பின்னர் மணவையைச் சேர்ந்த மருத்துவ மாமேதை மறைந்த லட்சுமி நாராயணன் பெரும் முயற்சியால் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் புது பொலிவோடு கடந்த 25 8 1985 ஆண்டு புதிதாகக் கட்டப்பட்டு குடமுழக்கு செய்யபட்டது

புதிதாக குடமுழுக்கு செய்யப்பட்ட நாளிலிருந்து முத்துமாரி என்று அழைக்கப்பட்ட அன்னையை வேப்பிலை மாறி என்று பக்தர்கள் கைகூப்பி வணங்க ஆரம்பித்தனர் அதன்பின்னர் கடந்த 14 3 1994 ஆம் ஆண்டு கோவிலின் முன்பு ராஜகோபுரம் எழுப்பப்பட்டு குடமுழக்கு விழா நடத்தப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை கோவிலுக்கு வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழக்கு செய்வது வழக்கம் அதன்படி கடந்த 27 1 2008 அன்று கோவிலில் மராமத்து வேலைகள் செய்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது அதன் பிறகு கடந்த 04.04.2024 ஆம் ஆண்டு திருக்கோவில் புணரமைக்கப்பட்டு கோபுரங்கள் வடிவமைத்து மிக சிறப்பாக பரம்பரை அறங்காவலர் ஆர். வி. எஸ் வீரமணி தலைமையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருகுடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடதக்கது.

இந்த ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதிகுத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை திருவிழா தொடங்கி இன்று பால்குடம் மற்றும் வேடபரி திருவிழா மிக சிறப்பாக முத்திரை பதிப்பதைப் போல எழுச்சி மயமாக தொடர்ந்து நடந்து வருகிறது மணவை நகரம் வாருங்கள் மாறியவள் கோவிலிலே மனம் உருகி வேண்டுங்கள் வேண்டுவது கிட்டும் வேண்டாத வினைகள் விலகும்.

கட்டுரை