June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கல்…

சேவா அறக்கட்டளை ஈரோடு காய்கறி சந்தை நண்பர்கள் குழு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது…

ஈரோடு. மே. 18

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏழைப் பொதுமக்களுக்கு, தாளவாடி ஐயப்பா சேவா சங்கம் மற்றும் ஈரோடு நேதாஜி காய்கறி சண்டை நண்பர்கள் குழு சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி தலைமலை ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேய திருக்கோவில் ர் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை நண்பர்கள் குழு இணைந்து கடந்த 17 மாதங்களாக, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இந்த அன்னதானம் வழங்கப்படும் நிகழ்வு என்பது ஏழை பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, அவர்களுக்கு ஒரு மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு அலங்காரங்கள் செய்து மலர் தூவி பூஜை செய்து இந்த அன்னதானத் திட்டத்தை நாள்தோறும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் பாடலை இயற்றிய மோகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு லக்காபுரம் பாலாஜி பவர் கனெக்ட் உரிமையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார், ஈரோடு கலைமகள் கல்வி நிறுவனங்களின் உரிமையாளரின் பேரன் ஜெ. சிவக்குமார், ஏ டி அரிசி மண்டி காமராஜ், மணியன் ஸ்டோர்ஸ் சுரேஷ், மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில் 700 பேருக்கு அன்னதானமும், அப்பகுதியில் 250 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.