June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு.

குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த வீரப்பூர் உலக புகழ்பெற்ற பொன்னர் சங்கர் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் மாசி மாதங்களில் மிகப்பெரிய அளவிற்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இதே போல் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற ஆடு கோழி என வெட்டி சாமிக்கு படையில் செய்து வருகின்றனர்.

இப்படி உலகப் புகழ் பெற்ற வீரப்பூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடையால் வி பூசாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தினம்தோறும் காலை முதலே வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை

இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாடு அரசு கோவில் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் வீரப்பூர் வீ பூசாரிப்பட்டியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கடைக்கு முன்பாக அமர்ந்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் போட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் திடீரென மண்ணெண்னெய் ஊற்றி கொள்ள முயற்ச்சித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது

பின்னர் இது பற்றி தகவல் அறிந்த
மணப்பாறை தாசில்தார் சுந்தர பாண்டியன் மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் அதிகரிகள் 6 மாதம் அவகாசம் கேட்ட நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் வி பூசாரிப்பட்டி டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது