புதுச்சேரி:
ஆர் எல் வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் புதுச்சேரியின் மூத்த அரசியல்வாதியுமான ஆர் எல் வி வெங்கட்ராமன் அவர்கள் இன்று செய்தியாளர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர், வரும் புத்தாண்டு புதுச்சேரி மக்களின் வாழ்வில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மலரும் புத்தாண்டு புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், குறிப்பாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பெண்களின் அதிகாரப் பகிர்வுக்கான ஆண்டாகவும் அமைய வேண்டும். ஆர் எல் வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அனைத்து மக்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்