June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி நகராட்சியில் ரூ.16.95 லட்சம் மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது

புதுச்சேரி, ஜூன் 4:

புதுச்சேரி நகராட்சி சார்பில் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் சம்பா நகர தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ. ஜான்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்திற்காக ரூ.16,95,837 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025-26) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சியின் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பணிகள் சுமார் 6 மாதங்களில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.