June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் செயல்பட்டு வரும் Bridges Learning Vidyalaya பள்ளியில் இந்த ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை தொடர்கிறது.இதை பற்றி பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் கூறுகையில் ,பல ஆண்டுகளாக பள்ளியுடன் பயணித்து வந்த மாணவர்கள் இன்று உயரிய வெற்றியை அடைந்துள்ளனர். கண்ணீர், கவலை, “என் குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகும்?” என்ற பெற்றோரின் மனஅழுத்தம் ஆகியவற்றிலிருந்து இன்று வெற்றியின் உச்சியை எட்டியுள்ள இந்த மாணவர்களின் பயணம் அனைவரையும் நெகிழச் செய்கிறது.

சிறுவர் பருவத்திலிருந்து வளர் இளம்பருவம் வரை நியூரோ டைவர்ஸ், சுமாராக கற்போர் , மெதுவாக கற்போர், மற்றும் அசாதாரண திறன்கள் கொண்ட குழந்தைகளின் வளர்ச்சி, தன்னம்பிக்கை, சமூக பழக்கம், கல்வி முன்னேற்றம் ஆகியவை Bridges Learning Vidyalaya-வின் தனித்துவமான வழிகாட்டுதலால் உருவாகியுள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

இப்பள்ளியின் பெற்றோர்கள் பகிர்கையில்,
“இந்த குழந்தைகள் மதிப்பெண்களில் மட்டும் அல்லாமல், மனிதநேயம், ஒற்றுமை, பரிவு, தலைமைத்திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் சகோதரர், சகோதரிகளாக நேசித்து வளர்வது எங்களை பெருமைப்பட வைக்கிறது. சவால்கள் நிறைந்த கேள்விக்குறி நிலையிலிருந்து வெற்றிகரமான வாழ்க்கைப் பயணத்திற்குச் சென்றுள்ள ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான சாதனையாளர்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் பெற்றோர்கள், “Bridges உடன் இணைந்த பிறகு எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், சமூக பழக்கம், பொறுப்பு உணர்வு, தன்னம்பிக்கை ஆகிய அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து கொண்டாடிய இந்த வெற்றி விழா உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது.