கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மகளிர் கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவு களில், காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இது குறித்து, பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் காயத்ரிதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், அங்கிநாயனப்பள்ளியில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, பி.காம்., கூட்டாண்மை செயலரியல், கணக்குப்பதிவியல் மற்றும் நிதி, பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணிதம், ஊட்டச்சத்து (ம) உணவு கட்டுப்பாட்டியல், கணினி அறிவியல், மின்னணுவியல், பி.சி.ஏ., கணினி பயன்பாட்டியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்குக் கல்லுாரியில் கலந்தாய்வு நடக்கிறது. மேலும், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை, 31- வரை, www.tngasa.in என்ற இணையதள முகவரியில், மாணவியர் விண்ணப்பிக்கலாம். இக்கல்லுாரியில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், உணவு (ம) ஊட்டச்சத்தியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும் தகவலுக்கு, 04343 – 265594 என்ற கல்லுாரி உதவி மைய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
பர்கூர் அரசு மகளிர் கலை கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு

More Stories
வாழ்க்கை முழு வட்டமாகச் சுழலும் ஒரு வியக்கத்தக்க தன்மையைக் கொண்டது.
*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்