புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பிள்ளைத்தோட்டதில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. கார்த்திகேயன் அவர்கள் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் திரு. செ. நடராஜன் மற்றும் வழக்கறினர் அணி துணை அமைப்பாளர் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் திருமிகு. இரா. சிவா அவர்கள் கலந்துக்கொண்டு கழகக் கொடியேற்றி 500ருக்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமார், சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெ. வேலவன், பா. செ. சக்திவேல், ஜே, வேலன், தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், சத்தியவேல், தொகுதி அவைத்தலைவர் பானு கணேசன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், வழக்கறினர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அருண், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ரமேஷ், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ராம்குமார் மற்றும் வெங்கடேசன் விஸ்வா உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிள்ளைத்தோட்டம் திமுக கிளைக் கழகம் செய்திருந்தது.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.