புதுச்சேரி ஜெயராணி பள்ளி மூடல் விவகாரம்: அவசர பொதுநல வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
புதுச்சேரி: புதுச்சேரி புஸ்சி வீதியில் இயங்கி வரும் ஜெயராணி அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம், பள்ளியை மூடும் நோக்கில் மாணவர்களை கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், செயலர் உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டது. எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அடுத்தகட்டமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெயராணி அரசு உதவி பெறும் பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவரும், தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளருமான திருமதி இவான் கிறிஸ்டின் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் V.லட்சுமிநாராயணன் மற்றும் G.R.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, இன்று வழக்கை விசாரித்தது.
விசாரணையின் முடிவில், 08.06.2026-க்குள் இவ்விவகாரம் தொடர்பாக உரிய பதிலளிக்குமாறு புதுச்சேரி அரசுக்கும், ஜெயராணி பள்ளி நிர்வாகத்திற்கும் நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஜெயராணி அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் இந்த வழக்கை தொடர, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை வழிகாட்டி ஒத்துழைப்பு வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இப்படிக்கு
திருமதி இவோன் கிறிஸ்டின்
தலைவர், ஜெயராணி முன்னாள் மாணவர் சங்கம்.
செயலாளர், தேசிய மக்கள் முன்னணி

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்