June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நாமக்கல்,15/05/2026

தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள்” அமைப்பின் மூலம், தங்களது பேட்சில் பணியாற்றியபோது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 27.08.2025 அன்று நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் 1124 திரு. சௌந்தர்ராஜன் அவர்கள் பணிக்கு புறப்படும் வேளையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் நோக்கில், “2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள்” அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 25,91,500/- (ரூபாய் இருபத்தைந்து லட்சத்து தொண்ணூற்று ஒன்று ஆயிரத்து ஐந்நூறு மட்டும்) நிதியுதவி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி S. விமலா, இ.கா.ப., அவர்கள் மூலம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

மேலும், இதுவரை இவ்வமைப்பின் மூலம் உயிரிழந்த 52 காவலர்களின் குடும்பங்களுக்கு மொத்தமாக ரூபாய் 10,23,75,737/- (ரூபாய் பத்து கோடியே இருபத்து மூன்று லட்சத்து எழுபத்தைந்து ஆயிரத்து எழுநூற்று முப்பத்தேழு மட்டும்) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தகைய மனிதநேயச் செயலை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.