September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேன்கனிக்கோட்டையில் ஆடு திருட்டு வழக்கில் எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஆடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் .ஆனந்தராஜ் அவர்கள் மேற்ப்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர வேட்டையில் ஈடுபட்டு ஆடு திருட்டு குற்றங்களை தடுத்து, குற்றவாளியை விரைவில் பிடித்தமைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா அவர்கள் தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.