அனுப்பர்பாளையம், ஜன.5-
திருப்பூர் சந்திராகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
யில் ரூ.1கோடியே
59 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் சேகர் தலைமை தாங்கினார்.
கல்வி குழுத் தலைவர் திவாகர் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை ஞானாம்பாள் வரவேற்று பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சித்ரா, வட்டார கல்வி அலுவலர் சியாமளா, வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மேயர் தினேஷ்குமார் புதிய வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவில், பட்டதாரி ஆசிரியர் சிவராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் கந்தசாமி, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள்மேயர் திறந்து வைத்தார்!!

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்