July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர் கையூட்டுப் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் பிடிபட்டுள்ளார்!

திருச்சி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு, TET தேர்வில் தேர்ச்சிப் பெற்றது தொடர்பான நிலுவை தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு, மேற்படி மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தியை தேவியின் கணவர் இளமுருகு சந்தித்து கோரிக்கை வைத்தபோது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க ஏற்பாடு செய்ய ரூ.30,000/- லஞ்சம் கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 30.06.2026ந்தேதி பெண் ஆசிரியை தேவியின் கணவர் இளமுருகு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 30.06.2026ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ். பாலமுருகுன், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்சப்பணம் ரூ. 30,000 இளமுருகுவிடமிருந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கேட்டுப் பெற்று வைத்திருந்தபோது கையும், களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.