June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி.ஜனவரி-28

சமுத்திரத்தில் தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டினைக் கட்டுபடுத்த கவர்ச்சி பொறி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சமுத்திரம் கிராமத்தில் தென்னை விவசாயின் தோட்டத்தில் தென்னை சிவப்பு கூன் வண்டினை கட்டுபடுத்த
மண்பானையில் புளித்த இளநீர் 2.5 லிட்டர் அதனுடன் 5 கிராம் ஈஸ்ட் மற்றும் இக்கலவையுடன் தென்னை ஓலை மட்டையினை நறுக்கி அதில் இட்டு இதனுடன் கரும்பு சாறுடன் கலந்து வைத்து ஆண் பெண் சிவப்பு கூன் வண்டினை கவர்ந்து அழி்ககும் முறையினை விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் , குடுமியாண்மலை மாணவர்கள் அபிஜின், அபினாஷ் தாஸ், அபினேஷ், அபிராம், அருள்முருகன், தீனதயாளன்,திவாகர்,தினேஷ், தருவீன் ராஜ துரை, பார்திவ் ஜீவன் ஆகிய வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இதை செய்து காட்டினர்.