June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி முதலியார் பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலியார்பேட்டை, ஜூன் 22:

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் N. ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநில நிர்வாகிகள் புதியவன் மற்றும் நிரேஷ் முன்னிலையில், தொகுதி தலைவர் N. மணிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 400 பொதுமக்களுக்கு சேலைகள் மற்றும் 300 மாணவர்களுக்கு எழுதுபொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

முதலியார்பேட்டை தபால் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த S. பாலமுருகன் (B.Com., CS) ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், பிறந்தநாளை சமூக நலத்திட்டங்களின் மூலம் கொண்டாடியது பாராட்டத்தக்கது என தெரிவித்தனர்.