விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பழங்குடி பள்ளி மாணவிக்கு செஞ்சி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் மிதிவண்டி வழங்கப்பட்டது.
மேல்மலையனூர் நரிக்குறவர் பகுதியில் பாண்டியன் குஷ்பூ இவர்களின் மகள் தர்ஷினி என்ற மாணவி மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவருக்கு பள்ளி சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்த சூழ்நிலையில் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளையிடம் மிதிவண்டி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையினை பரிசீலித்த உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சென்னை பீஷ்மா டியூஷன் சென்டர் நிறுவனர் செல்வராஜ் அவர்களின் உதவியுடன் மாணவி தர்ஷினிக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செஞ்சி கிளைச்சிறை பார்வையாளர் இரா.ஜான் சத்தியசீலன் வரவேற்புரை வழங்கினார். அவலூர்பேட்டை கிராம வருவாய் ஆய்வாளர் சசிகலா அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமலை, துணை தலைமை. ஆசிரியரும் கலந்து கொண்டார்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!