செவலபுரைஅரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம்வகுப்பு படிக்கும் 57 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேச்சு……
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் செவலபுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி குழுத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் 57 மாணவ மாணவிகளுக்குதமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில்:
தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சொல்லும், செயலையும் நிறைவேற்றுகின்றவகையில் உலகமே வியந்து பார்கின்ற வகையில் முதலமைச்சர்
பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
அந்த வகையில்
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின்கடுமையான உழைப்பாலும், அறிவுபூர்வமான செயல் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்று எல்லாத் துறைகளிலும் முதன்மை இடம் பெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்ஒன்றிய கவுன்சிலர்கள் காசியம்மாள் கோதண்டம், ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா ஜெய்சங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம்,முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்காவனம்,நிர்வாகிகள் பூண்டி சங்கர், இளையபெருமாள், ஜெயபால், சேகர், மாதவன்,சுதர்சனம் அரசு வழக்கறிஞர்சீனிவாசன், முருகேசன்,பிரகாஷ்,காசி, பூங்காவனம்,ரஹ்மத்துல்லா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

More Stories
குறிஞ்சிப்பை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் ஊர்வலம்
புதுச்சேரியில் சங்கமம்: பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நெட்வொர்க் அசோசியேஷன் மாநாடு!