சேலம் அரியானூரில் காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி – தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.
சேலம்,அரியானூா் அருகே காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி கோவை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.
சேலம் மாவட்டம்,வீரபாண்டி ஒன்றியம்,ராக்கிப்பட்டி பகுதியில் அருந்ததியா் சமூகத்திற்கு என காளியம்மன் பதி அமைந்துள்ளது.
இதனை பல ஆண்டுகளாக இந்த சமூகத்தினா் ஒவ்வொரு மாசி மாதம் பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் இதன் அருகே அப்பகுதியை சோ்ந்த ஒருவா் 23-ம் தேதி வியாழக்கிழமை கோயிலுக்கு செல்லாதவாறு தடுப்பு வேலி அமைத்துள்ளாா் .இதனை அறிந்த ஊா் பொதுமக்கள் நாங்கள் எப்படி கோயிலுக்கு செல்ல முடியும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசாா் சம்பவ இடம் வந்து சமரச பேச்சுவாா்த்தையில் நடத்தினா். இப் பிரச்சனை குறித்து பேச அதிகாரிகள் யாரும் வராததால் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையான ராக்கிப்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை போலீசாா் விரைந்து வந்து அவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி உரிய அதிகாரியிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதாக தெரிவித்த பின்னா் கலந்து சென்றனா். இந்த மறியல் சுமாா் அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது அவ்வழியே வந்த 108 ஆம்புலன்ஸ் மட்டும் பொதுமக்கள் வழிவிட்டனா். இதனால் இப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வந்தன.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!