சேலம் காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய போலீசார் ஆடு பலி கொடுத்து சுவற்றில் ரத்தம் தெளிப்பு.
ஸ்டேஷனில் குற்றங்கள் குறைய ஆடு பலி,சுவற்றில் தெளிக்கப்பட்ட ரத்தம் சர்ச்சையில் சேலம் போலீஸ்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் இயங்கி வருகிறது தீவட்டிப்பட்டி காவல் நிலையம். ஆய்வாளர் இல்லாத நிலையில், இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இந்த காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஆடு ஒன்றை பலியிட்டு அதன் ரத்தத்தை ஸ்டேஷன் சுவர்களில் தெளித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.

தெளிக்கப்பட்ட ஆட்டு ரத்தம்
பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ஸ்டேஷன் காவலர் ஒருவர், “தீவட்டிப்பட்டி ஸ்டேஷன் லிமிட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குற்றங்கள் குறைய வேண்டும் என வேண்டுதல் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் ஸ்டேஷன் வாசலிலேயே கிடா வெட்டி பலியிடப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு, கிடாயின் ரத்தத்தை ஸ்டேஷனைச் சுற்றி தெளிக்கப்பட்டது. பலியிடப்பட்ட கிடாயை பக்கத்தில் உள்ள சிக்கன் சென்ட்டரில் கொடுத்து சமைத்து காவலர்கள் அனைவரும் சாப்பிட்டோம்” என்றார். குற்ற செயல்களை தடுக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையினர் குற்றங்களை குறைக்க வழிபாடு நடத்துகிறோம் என்கிற பெயரில் ஆட்டை பலியிட்டு ரத்தத்தை ஸ்டேஷன் சுவர்களில் தெளித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

More Stories
திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடமிருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு Water Filling வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த நிரஞ்சன் மண்டல் வயது 38, S/o கணேஷ் மண்டல், பவானி பூர், பூர்ணியா மாவட்டம், பீகார் என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் திரு சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மத்தூர் அருகே சோகம்: திருமணத்திற்கு வந்த மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டையில் ஆடு திருட்டு வழக்கில் எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு