June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு த.வெ.க சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கினர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மாதப் பூண்டி ஊராட்சி கஞ்சூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குண சரவணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவி வழங்கி சிறப்பாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பழவலம் சாந்த சீலன் ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில்
முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

செஞ்சி ஒன்றிய வட மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள பத 10, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர் .

தொடர்ந்து
கஞ்சூர் கிராமத்தை தத்து எடுத்து அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் உடைகள் பிளாஸ்டிக் குடம் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் நோட்டு புத்தகங்கள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் ஸ்ரீதர் ஒன்றிய பொருளாளர் இளங்கோ துணை செயலாளர் ஐயப்பன் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

You may have missed