June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,09/05/2026.

சேலம் மத்திய சிறை பொதுத்தேர்வு முடிவுகள் – 100% தேர்ச்சி பெற்று சாதனை.

சேலம் சிறையில் 100% தேர்ச்சி – பிளஸ் 2 தேர்வில் கைதிகள் காட்டிய மாஸ் பெர்பார்மன்ஸ் – முதல் மார்க் எவ்வளவு தெரியுமா??

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறைவாசிகள் 100% தேர்ச்சி

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் 21 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். அதில் 21 பேரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தண்டனை கைதி சண்முக பிரபு 480 மதிப்பெண்கள் பெற்று சேலம் சிறைவாசிகளில் முதலிடம் பெற்றுள்ளார். 478 மதிப்பெண்கள் பெற்று தமிழரசன் இரண்டாம் இடமும், 468 மதிப்பெண்கள் பெற்று கலையரசன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.inஆகிய இணையத்தளங்கள் வாயிலாக தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வாட்ஸ்அப் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலிடம் பிடித்த ஈரோடு

இந்த ஆண்டு தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கிறது. பாடம் வாரியாக பார்த்தபோது, அதிகபட்சமாக 6,945 பேர் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 13, 2026 முதல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.