August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சங்கராபுரத்தில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி

சங்கராபுரம் ஆக,26

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார்.

சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சதுரங்கத் திறமையை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சேரி அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, ஆசிரியர்கள், நடுவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.