August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மக்களின் நம்பிக்கை துரோகத்தின் முதன்மையான ஆட்சி என் ஆர் ஐயா வின் சர்வாதிகார ஆட்சி , ஊழலில் தலைசிறந்த ஆட்சி மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கை நடுத்தெருவில் ஆக்கிய ஆட்சி ஊழல் முன்னோடியாகவும் குற்ற வழக்கில் தலைசிறந்தவனாக இருந்தால் ஆட்சி அதிகாரம் வழங்கப்படும்

விளம்பரத்தில் முதன்மையாக விளங்கக்கூடிய ஆட்சி

கடந்த ஆட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடியிருந்து வரும் இடத்திலே மனை பட்டா வழங்கப்படும் என்று அறிவித்தார் அறிவித்த ஆறு மதத்தில் அரியாங்குப்பம் தொகுதி மூன்று தலைமுறையாக வாழ்ந்த மக்களை ஈவு இரக்கம் இன்றி வீட்டை இடித்து பெண்கள் என்று பாராமல் வழக்கு பதிவு செய்து ஆடைகளைக் கிழித்து சிறையில் அடைத்து சுயம்பு கோயில் மேற்கூறிய இடித்து ஆன்மீகம் என்ற பெயரில் போலியாக பூஜை போடும் ஆசாமி எங்கு ஆன்மீகம் இருக்கிறது

புதுச்சேரியில் 100 சதவீதம் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமல் உருவாக்கப்படும் ஐயா ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆறு ஆண்டில் புதுச்சேரி மாநிலமே திறந்த வெளி கழிப்பிடம் போல் தான் இருக்கிறது அதையும் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள்.

புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூபாய் 3,44,922 உயர்ந்து உள்ளது என்று புதுச்சேரி அரசு திரித்து தெரிவித்துள்ளது

மக்களுடைய வரிப்பணத்தை ரூ.560 கோடி வீணடித்து தனியார் பள்ளி முதலாளிகளை வாழ வைக்கிறது ஏழை பிள்ளைகளை தரம் இல்லாமல் கல்வியில் சீரழிக்கிறது ஆசிரியர்கள் அரசு வேலை வேண்டும் அவர்கள் அரசு பள்ளியில் அவர்கள் பிள்ளைகளை எப்போது சேர்க்கிறார்களோ அப்பொழுதுதான் அரசு பள்ளி தரம் உயரம்

இது உண்மையா விளம்பரமா அப்படி இருக்கும்போது ஏழைகளுக்கு மகளிர் உதவித்தொகை அறிவிக்கப்படுகிறது வருமானம் உயர்ந்த பிறகு எதற்கு வழங்க வேண்டும் ஏமாற்று வேலை தானே

எந்த ஒரு வரி சுமையும் ஏற்றவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் முடிந்தவுடன் அன்றாட தேவைப்படும் பொருள்களில் அனைத்தையும் வரி சுமைகளை ஏற்றப்பட்டு விட்டாச்சு இதுக்கு மேல ஏற்றுவதற்கு என்ன இருக்கிறது இன்னும் இருப்பது மக்களுடைய உயிர் மட்டும் தான்

தனிநபர் வருமானம் யாருக்கு உயர்ந்தது உங்க சட்டமன்ற உறுப்பினருக்காக உங்கள் கட்சித் தலைவர்களுக்கா? போஸ்டர் ஓட்டுபவர்களுக்கு பேனர் வைப்பவர்களுக்கா? புதுச்சேரி மக்களுக்கா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அரசு நிர்வாகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலையிடுகிறார் ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயக படுகொலை யார் செய்தது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் யார் உண்மையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் உண்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் வியாபாரிகள் படுகொலை என்று சொல்லலாமா? அதனால்தான் ஊழல்வாதிகளும் கொலை கொள்ளை அடிப்பவர்களும் ஆட்சி அதிகாரத்தில் வருகிறார்கள் மக்களுக்கு உழைக்க வேண்டும் சேவை செய்ய வேண்டும் என்று சமூகத்துக்காக துடிக்கும் சமூக ஆர்வலர்கள் ஆட்சிக்கு வர முடிகிறதா? கொள்ளையடிப்பவனை ஆட்சி அதிகாரம்

துணைநிலை ஆளுநர் மேற்பார்வையில் இருக்கும் போது அரசு மருத்துவமனையில் காலாவதி மருந்து இந்தியாவுக்கு போலி மாத்திரை மருந்து போலி பத்திரங்கள் தயார் செய்வது சாதாரண பாமரன் பத்திரப்பதிவு செய்தால் அரசுக்கு முறையாக வரி செலுத்தி அப்ரூவல் பெற்று பத்திரப்பதிவு செய்ய வேண்டும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வரவேண்டிய வருவாயை நஷ்டப்படுத்தி இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் இவர்கள் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்றால் அப்ரூவ்டு தேவையில்லை ஒரே சட்டம் ஏன் வேற்றுமை ஆகிறது ஊழல்வாதிகள் அரசியல் செய்கிறான் பாமரன் வரியை செலுத்துகிறான் வாழ்க்கையை தொலைக்கிறான் நடுத்தெருவில் நிற்கிறான் கேள்வி கேட்பவன் சிறைக்குச் செல்கிறான் குடும்பத்தை இழக்கிறான் வீட்டை இழைக்கிறான் அழிப்பவன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறான்

ஜனநாயகம் என்றால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெறுகிறார்களோ அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் அப்பொழுதுதான் ஊழல் இருக்காது வெளித்தன்மை ஆட்சி இருக்கும் மக்களை சீரழிக்க மாட்டார்கள் நல்ல நிர்வாகம் நடக்கும் புதுச்சேரியை பொருத்தவரை ஊழல்களும் சர்வாதிகாரங்களும் ஏழைகளை குழி தோண்டி புதைப்பதும் இப்படித்தான் ஆட்சி அதிகாரம் நடக்கிறது நான் மட்டும் வெற்றி பெற்று இருந்தால் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இருக்க வேண்டிய அவசியமே கிடையாது ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல மாற்றத்தை கொடுத்திருப்போம் சட்டசபை அலறவிட்டிருக்கும் என்ன செய்வது பணம் அரசியலை மாற்றுகிறது மக்களை மதி மயக்க வைக்கிறது இளைஞர்களை சீரழிக்கிறது ஆண்களை மது போதையில் சுடுகாட்டுக்கு அனுப்புகிறது இதெல்லாம் தெரியாமலே முதியவர்கள் முதியோர் ஆட்சிக்கு வாக்களிக்கிறார்கள் இளைஞர்கள் சிந்தித்து இளைய தலைமுறை வரவேண்டும் என்பதற்காக தொகுதிக்கு ஐந்தாயிரம் வாக்குகளை அள்ளி வீசினார்கள் அவர்கள் தான் உண்மையான ஜனநாயகம் புதுச்சேரியில் முதியவர்கள் வாக்குரிமையை இழக்கிறார்களோ ஜனநாயக ஆட்சி வரும். இளைய தலைமுறை எப்போது முழுமையாக வாக்கு செலுத்துகிறார்களோ அப்போதுதான் ஜனநாயக ஆட்சி வரும் தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி வந்தது. புதுச்சேரியில் பணத்தால் மதி மயக்க வைத்தது மக்களே சிந்தித்துப் பாருங்கள் உன்னையும் மக்கள் நலனையும் எப்போதும் நேசிக்கக் கூடியது புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் என்பதை நான் மார்கட்டி பெருமையாக பேசுவேன் 100% எனக்கு தகுதி இருக்கிறது.

அன்புடன் ரகு என்கின்ற ரகுநாதன் நிறுவனர் செல்:7845836004