கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் ந.இளையராஜா (BDS, MLA) தலைமை தாங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் E.முரளிவிஜய் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகுமார், சிங்காரவேலன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் D.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மத்தூர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர்களான விக்னேஷ், திருமூர்த்தி, சக்தி, சிவா ஆகியோர் அன்னதானப் பணிகளை ஒருங்கிணைத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக, மாவட்ட இணைச் செயலாளர் J.இப்ராஹிம் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்