கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா். ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சோ்ந்தவா் மூா்த்தி (48). இவா் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் மது போதையில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதனிடையே சிறுமி காணாததால் அவரது பெற்றோா் சிறுமியை தேடினா். அப்போது, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, தனக்கு நோ்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் குழந்தையை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் மூா்த்தியை போக்ஸோ வழக்கில் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!