கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டான பகுதியில் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மணி தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல துணைச் செயலாளர் தங்க தியாகு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கத்தை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சசிகுமார், பொருளாளர் ரகு, மாநிலத் துணைச் செயலாளர் பாலன், நகர துணைச் செயலாளர் கணபதி, நிர்வாகிகள் மணி ஜெகநாதன், சரவணன், பிரதாப், சாமுவேல், ராஜேந்திரசோழன், லட்சுமணன், ஆட்டோ குமார், வேலு கண்ணதாஸ், ரஜினி, சுரேஷ், அருண், சரவணன், சுரேஷ்குமார், கோவிந்தராஜ், அன்பு, மாதேஷ், பிரதீப், இனியவன், காளிதாஸ், ராஜதுரை, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!