திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் 1,300 படிகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறி சேலத்தைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு ும் சிறுமி யோகா விழிப்புணா்வு சாதனை படைத்தாா்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜூபோ் அகமது – அதியா பானு தம்பதியின் மகள் ஹனா (8). இவா், சேலம் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். மேலும், சேலம் சிவகுரு யோகாசன மையத்தில் யோகாசனம் பயின்று வருகிறாா்.
யோகா விழிப்புணா்வு சாதனைக்காக சிறுமி ஹனா, திருச்செங்கோடு மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயிலில் தொடங்கி மலை உச்சிவரை 1,300 ட்டுகளிலும் ஒவ்வொரு படியிலும் பல்வேறு யோகாசனங்கள் செய்து மலை ஏறினாா். சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு தொடங்கியவா் 10.30 மணி அளவில் 1,300 படியைக் கடந்து தனது சாதனை முயற்சியை நிறைவு செய்தாா்.
அவருடன், அவரது யோகாசன ஆசிரியா் சிவகுரு, யோகாசன சாலை யோகா ஆசிரியா் முரளி, பெற்றோா், சேலம் செவ்வாய்பேட்டை மாநகராட்சி உறுப்பினா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!