புதுச்சேரியில் காலவரையற்ற நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த ஆசிரியர்களின் நிலைமையை மத்திய அரசின் (இந்திய ஜனாதிபதி, பாரத பிரதமர், உள்துதுறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்)
கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அவர்கள் கடிதம்.!!!.
புதுச்சேரியில் பணியாற்றும் கௌரவ பட்டதாரி ஆசிரியர்கள் , விரிவுரையாளர்கள், மற்றும் பாலசேவிகாக்களின் நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளான பணி நிரந்தரம், நியாயமான ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க கோரி
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வரும் 292 விருந்தினர் பட்டதாரி
இவர்கள் கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக தொடர்ந்து மற்றும் அர்ப்பணிப்புடன், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான கல்விப் பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்டகாலம் சிறப்பாக பணியாற்றியிருந்தும், இன்றளவும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டிய நிலை தொடர்கிறது .
11 மாதங்கள் கொண்ட குறுகியகால ஒப்பந்தங்களில் நியமனம் செய்து, நிரந்தரம் வழங்காமல் மீண்டும் மீண்டும் புதுப்பித்தல்
ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கி, மீதமுள்ள மாதங்களுக்கு ஊதியம் வழங்காதது
சம்பள வழங்கலில் தாமதம் மற்றும் சில மாதங்களுக்கு முழுமையாக வழங்காத நிலை
பணி பாதுகாப்பு, சேவை நலன்கள் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் இல்லாமை
நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாகவே பணிபுரிந்தும் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற அரசியல் சாசனக் கொள்கை மீறப்படுவதும், அரசியல் சாசனத்தின் 14,16 மற்றும் 309 வது கட்டுரைகளின் கீழ் சமத்துவம் , இட ஒதுக்கீடு ஆகிய நியமன விதிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டார்கள் நிதிபற்றாகுறை காரணமாகவே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் 292 பேரும் போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி ஒப்பந்த அடிப்படையில் இருந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் ஆனால்
இந்த ஒப்பந்த ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக மனுக்கள் மற்றும் அமைதியான போராட்டங்கள், மூலம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் நியாயமான மற்றும் மனிதநேய அடிப்படையிலான கோரிக்கைகள் இன்றளவும் தீர்வு காணப்படவில்லை.
எனவே, தங்களது அலுவலகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
தங்களது சிறந்த தலைமையின் கீழ், புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அவசரமாகவும் மனிதநேய பார்வையுடனும் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.
இந்த நியாயமான கோரிக்கைக்கு விரைவான மற்றும் சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்.
புதுச்சேரி

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்