கண்டித்து விசிக இடதுசாரி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு. மே 08
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஈரோட்டில் இடதுசாரி அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்தும் மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர், வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு மற்றும் ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்தும். மத்திய அரசின் இது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்தும், ஈரோட்டில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு ஜவான் பவன் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு கிழக்கு மாவட்ட விசிக செயலாளர் எஸ் எம் சாதிக் தலைமை வகித்தார்.
சிபிஎம் மாவட்ட செயலாளர் ரகுராமன், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் பாலமுருகன், சிபிஐ(( எம். எல் ) மாநில குழு உறுப்பினர் கோவிந்தராஜ், விசிக ஈரோடு மண்டல செயலாளர் ஜாபர் உள்ளிட்டர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!