June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உலக சுற்றுச்சூழல தினத்தை முன்னிட்டு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா…

மொடக்குறிச்சி அருகே மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈரோடு. ஜூன். 06

ஈரோடு மொடக்குறிச்சி அருகே அங்கன்வாடி பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. ஈரோடு மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் இந்த விழாவில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள களப்பாரக்காடு என்ற இடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பயனுள்ள மற்றும் நிழல் தரும் மரங்களை, ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தா தேவி கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரையினை வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கே. அருள்மொழி மற்றும் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆர். காயத்ரி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.