வந்தவாசி, ஜூன் 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பு இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் நடத்தினர். இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்து, முதியோர்களுடன் உணவு அருந்தினார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வெட்டாமல் புதிய மர கன்றுகளை நாம் நட வேண்டும் என வலியுறுத்தினார். ஒவ்வொரு பிறந்த தினத்தை நினைவூட்டும் வகையில் அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு கற்க கசடற அமைப்பின் தலைவர் டாக்டர் இரா.பாஸ்கரன், வந்தவாசி வட்டாட்சியர் ஜெயவேல், கௌரவத் தலைவர் மலர் சாதிக் சமூ கநல விரிவாக்க அலுவலர் ஜீவா, முதியோர் இல்ல நிர்வாகி ரெக்ஸிலின் மைக்கேல், மூத்த வழக்கறிஞர் மணி, எக்ஸ்னோரா தலைவர் தனசேகரன், விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் சுரேஷ் பாபு, சமூக ஆர்வலர் சதானந்தன், யாசர் காலேசா மற்றும் ராஜா உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும் விதைப் பந்துகள் வழங்கப்பட்டது. கற்க கசடற அமைப்பின் சார்பாக முதியோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிலோமினா மங்கலம் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியை கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்