July 31, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் நடைபெற்ற போதை ஒழிப்பு தலை கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ஈரோடு எஸ் பி கிரண் ஸ் ருதி தொடங்கி வைத்தார்..

ஈரோடு. ஆகஸ்ட்
01

ஈரோட்டில் போதை ஒழிப்பு மற்றும் தலை கவசம் அணிவதின் அவசியம் குறித்து, காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக அமைப்பாக செயல்பட்டு வரும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தலை கவசம் அணிவதின் அவசியம் குறித்து ஈரோட்டில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரன்ஸ் ருதி வாழ்த்து தெரிவித்து தொடங்கி வைத்தார்.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தலை கவசம் அணிவதின் அவசியம் குறித்த இந்த பேரணி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள், காவல்துறையினர், பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

பின்னர் பன்னீர்செல்வம் பூங்காவில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தாதேவி தலைமை வகித்து, விழிப்புணர்வு கருத்துக்கள், மற்றும் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணியாமல் செல்வது எவ்வளவு ஆபத்து என்பது குறித்தும் அதோடு அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை மதித்து, அதற்கு கட்டுப்பட்டு தங்களின் வாகனங்களை இயக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.

முன்னதாக ஈரோடு மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்தும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் இரண்டு தன்னார்வ நபர்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை மிகவும் கவர்ந்தது.

ஈரோட்டில் காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட, மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு காவல்துறையினர் சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கினர்.