June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா..

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்.

ஈரோடு. டிச. 31

ஈரோட்டில் நேற்று மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நேற்று ஈரோட்டில் உள்ள ஏ எம் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் முகேஷ் சாமிநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது…

கைத்தறி நெசவுத்தொழில் என்பது இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சாரம் தன்மை கொண்ட ஒரு தொழிலாக விளங்குகிறது. இது நாட்டின் விவசாயத்திற்கு அடுத்தப்படியான மிகப்பெரிய வேலைவாய்ப்பு மிக்க ஒரு தொழிலாகவும் இருந்து வருகிறது. இந்த கைத்தறி தொழில் என்பது கைத்திறன் மிக்க தொழில்நுட்ப கலைநயம் கொண்டது. தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக பெரிய அளவில் கைத்தறி நெசவு என்பது புகழ்பெற்று விளங்கி வருகிறது.

மேலும் மத்திய கைத்தறி அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2025.. 2026 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் நேற்று(30/12/2025 முதல் அடுத்த மாதம் ஜனவரி(12/1/ 2026) வரை மொத்தம் 14 நாட்கள் இந்த கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையகம் செயல்பட உள்ளது.

மேலும் இந்த கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையகத்தில் மாநிலத்தில் உள்ள ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், ஈரோடு கோ ஆப் டெக்ஸ், நிறுவனம், நெசவாளர் சேவை மையம், பூம்புகார் விற்பனை நிலையம், காதி கிராம தொழில் வாரியம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம்( மகளிர் திட்டம்) மற்றும் வெளி மாநில கூட்டுறவு சங்கங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் நேற்று துவங்கப்பட்ட கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையகத்தில் 60 அரங்கங்கள், 116 கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதில் தங்களின் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பெட்ஷீட், படுக்கை வெறிப்புகள் கால் மிதியடிகள், வேட்டி சட்டைகள், காஞ்சிபுரம் மற்றும் திருபுவனம் பட்டு சேலைகள், லுங்கிகள் மற்றும் பலதரப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ள 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கண்காட்சியில் 2 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி, துணி நூல் பதனிடும் ஆலை செயல் ஆட்சியர்( துணை இயக்குனர்) சிவக்குமார், நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் ( சேலம்) கார்த்திகேயன், உதவி இயக்குனர்( கைத்தறித்துறை ) சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்