July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..

கபடி விளையாட்டு போட்டிக்கு உதவிகள் செய்து வரும் ஈரோடு தயா அறக்கட்டளைக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்..

ஈரோடு. ஜூலை. 28

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகள், விளையாட்டுப் போட்டிக்கு உதவியாக இருந்த ஈரோடு தயா அறக்கட்டளைக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தயா அறக்கட்டளையின் மூலம் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இதில் குறிப்பாக மலை கிராம பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்க ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்குட்பட்ட மண்டல அளவிலான யு. 17 விரைவில் மாணவிகளுக்கான கபடி போட்டியில் கடம்பூர் பகுதி மாணவிகள் முதல் இடம் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்களின் கபடி விளையாட்டு போட்டிக்கு பல்வேறு வகையில் உதவி செய்து உறுதுணையாக இருந்த ஈரோடு தயா அறக்கட்டளைக்கும், அதன் நிறுவன தலைவர் டாக்டர் என் எம் பிரதீப்புக்கும் தங்களின் மகிழ்ச்சிகளையும், நன்றிகளையும் தங்களின் அணியின் சார்பில் தெரிவித்துள்ளனர்.