விழுப்புரம் மே 13
விழுப்புரம் இ.எஸ்
கல்வியியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர்
சந்திப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவை சி.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர்
செல்வமணி தலைமை தாங்கி துவங்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்முருகன்
வரவேற்புரையாற்றினார்,
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருத்தினர்களாக கடலூர் நல்லாசிரியர்
விருது பெற்ற மரிய ஜோசப்
திருவண்ணாமலை, கலைஞர் கருணாநிதி
அரசு கலைக் கல்லூரி விரியுரையாளர் முனைவர் முருகன்
கல்வியியல்
கல்லூரி முன்னாள் மாணவர், விழுப்புரம் சிகரம் போட்டி தேர்வு அகாடமி இயக்குனர் கணபதி,கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாணவர்களின் கல்வி மட்டும் அன்றி ஒழுக்கம் தன்னம்பிக்கை மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள் மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டால் மாணவர்கள் உயர்ந்த நிலை அடைய முடியும் என்றும் நோக்கம் அளிக்கும் வகையில் பேசினார்கள் இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் வாழ்வில் பதிவு கல்வி முன்னேற்றம் ஒழுக்கம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முக்கியத்துவத்தை எடுத்து வைக்கிறார் மேலும்
மாணவர்கள் வில்லுபாட்டு, நாடகம், நடனம், பேச்சு, கரகம், போன்ற
நிகழ்ச்சிகளை நடத்தியும் அனைவரின் பாராட்டைப் பெற்றனர்.
இறுதியில் வருகைபுரிந்த
பெற்றோர்கள் அனைவரும் இணைந்து மாணவர்கள் ஒவ்வொவருக்கும் ஆசிவழங்கி
மகிழ்ந்தனர்.
இதில் சி.எஸ்.கல்வியியல் கல்லூரி துணை பேராசிரியர்களும் மற்றும் பயிற்சி மாணவ
ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இ.எஸ் கல்வியியல் கல்லூரியில்பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு விழா

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்