அறந்தாங்கி மே 27
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் அறந்தாங்கி சக்கரவர்த்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பாஜக சார்பில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கவிதா ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் காலத்தில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார்.
மேலும், தேர்தல் என்பது வெற்றி–தோல்வியைத் தாண்டி மக்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும், தேர்தல் காலத்தில் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அனைவரும் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை என்றும் கவிதா ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் வளர்ச்சிக்காக எதிர்காலத்திலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பாஜக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். , கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.