June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி பகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்..!

வந்தவாசி, ஜூன் 29:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் குழந்தைகளுக்கு அளித்து துவக்கி வைத்தார் .
அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நலன் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

வந்தவாசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமில் தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார், சுகாதார மைய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பக்கிர்தக்கா அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை எக்ஸ்னோரா மாவட்ட அமைப்பாளர் மலர் சாதிக் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் சு. தனசேகரன், நல்நூலகர் ஜா.தமீம், அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அ.மொபீனா, உதவியாளர் ஹாஜிரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பல்வேறு இடங்களில் வந்தவாசி நகராட்சி மற்றும் நகர ஆரம்ப சுகாதார மையத்துடன் இணைந்து ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு மைய அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.