August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!

வந்தவாசி, ஆக 26:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நல சங்க கூட்டம் மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. மருத்துவ சிவப்பிரியா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் . தொடர்ந்து வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தர தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் செய்யாறு சப் கலெக்டர் அம்பிகா ஜெயின், வட்டாட்சியர் ப.ஜெயவேல், நகர்மன்ற தலைவர் எச்.ஜலால், நகராட்சி ஆணையர்
வீர.வாஞ்சிநாதன், நகர்மன்ற உறுப்பினர் கே.நாகூர்மீரான், டாக்டர்கள் எஸ்.குமார், கே.பஷுர் அஹமது, வந்தவாசி நகர திமுக செயலாளர் எ.தயாளன், மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் எச். மதன்குமார், கிளை செயலாளர் சாகுல் அமீது, நவாப் பள்ளி இமாம் சிராஜூதீன், துணை இமாம் முகமது யூனுஸ், எக்ஸ்னோரா சு.தனசேகரன், ரோட்டரி சந்தானம், கற்க கசடற இரா.பாஸ்கரன், சமூக சேவகர் மலர் சாதிக், விவசாய அமைப்பு மருதாடு மணி, சையத் அப்துல் கறீம், எஸ்.ஐ. ஆரிப் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.