February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மேல் வடுகன்குட்டை பாலாஜி நகரில் ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

வேலூர், ஜன.30 –
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் ஜாப்ரப்பேட்டை அடுத்த மேல் வடுகன்குட்டை பாலாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜனவரி 30 வெள்ளியன்று நடைபெற்றது.
முன்னதாக கணபதி, நவகிரக ஹோமம் பூர்ணாஹூதி, முதல் கால பூஜை இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் நிறைவாக புனித நீர் கோபுரம் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்,ஆஞ்சநேயர் தக்ஷிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
விழாவிற்கு விநாயகர் கோயில் தர்மகர்த்தா டி கே காசி கவுண்டர் தலைமையில் வகிக்க, கோயில் அறங்காவலர் குழு தலைவர் சிவகுமார், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ஜெய்சங்கர், புஷ்பராஜ், மணிகண்டன், கிருபாலன் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

Facebook
YouTube
Instagram
WhatsApp