விழுப்புரம் ஜன 31
விழுப்புரத்தில் இயங்கி வரும் இ எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் இ எஸ் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது .
இ எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார்.
செயலாளர் பிரியா செல்வமணி முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார்,பொறியியல் ,தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர்.இந்திரா,ஏழுமலை பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் மாணவ மாணவிகள் பாரம்பரிய உணவுகளாக தயார் செய்த கேழ்வரகு களி,கேழ்வரகு அல்வா, பிடி கொழுக்கட்டை, சிமிலி,உக்கலி,உப்பு ,உருண்டை கம்பு, பக்கோடா , உளுத்தங்களி தினை அதிரசம், தினை லட்டு , எள்ளு உருண்டை சத்துமாவு கஞ்சி கொழுக்கட்டை குழி பணியாரம் மீன் குழம்பு சாதம் மற்றும் தானியத்தால் செய்யப்பட்ட 180 வகையான பாரம்பரிய உணவுகளும் அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்களை விளக்கும் விதமாக காட்சிப்படுத்தினர் .
விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் களும்,கல்லூரி குழுமத்தின் துணை பேராசிரியர்கள் சுற்றியுள்ள பொதுமக்களும் இ எஸ் கல்வி பணியாளர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!